Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 19 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் சூர்யா தற்போது தனது 45 ஆவது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46ஆவது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
இப்படத்துக்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார்.
இதனை தனது சமூக வலைதளத்தில் வெங்கி அட்லூரியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
இது இவர்கள் இருவரும் இணையும் 3 ஆவது படமாகும். இதற்கு முன்பு, வெங்கி அட்லூரி இயக்கிய 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .