2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

டிடியின் புது அவதாரம்

J.A. George   / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான டிடி என்ற திவ்யதர்ஷினி, தமிழில் ஜூலி கணபதி, விசில், நளதமயந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 

20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். 

பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான என்னு நின்டே மொய்தீன் திரைப்படத்தில் இடம்பெறும் முக்கத்து பெண்ணே பாடலை தமிழில் ஆல்பம் பாடலாக உருவாக்கி உள்ளனர். 

இதை டிடி தயாரித்து, இயக்கிதோடு மட்டுமல்லாமல் அவரே நடிக்கவும் செய்துள்ளார். நிகில் மேத்யூ பாடியுள்ள இந்தப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X