Mithuna / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரெளட்டாலா தமிழில் ‘லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந் நிலையில் நடிகை ஊர்வசி ரெளட்டாலா அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதன் போது அவர் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டினார். இந்த கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் அவருக்கு பரிசளித்து உள்ளார்.
பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து ஒரு மியூசிக் ஆல்பத்தில் ஊர்வசி ரெளட்டாலா பாடிய நிலையில் இந்த தங்க கேக்கை அவர் பரிசளித்துள்ளார் .
இதனை அடுத்து பாடகர் ஹனி சிங்குக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசி ரெளட்டாலா நன்றி தெரிவித்துள்ளார்.


தங்க கேக் குறித்து யோ யோ ஹனி சிங் கூறியபோது ’என்னை பொறுத்தவரை ஊர்வசி உலகிலேயே மிக அழகான பெண், அதை நான் பலமுறை அவரிடமே கூறியிருக்கிறேன், அவர் மிகவும் அழகான பெண் என்பதால்தான் அவருக்கு நான் மூன்று கோடி மதிப்புள்ள தங்க கேக்கை பிறந்தநாளுக்கு பரிசாக அளித்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago