Mayu / 2024 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விக்ரம் பா. ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோத் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர். மற்றொரு முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்கிறார்.

இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் வருவதோடு ஆங்கிலேயர் காலத்தில் நடந்த கேஜிஎஃப் சம்பவத்தை மையமாக வைத்து இப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதில் விக்ரம் இப்படம் வியாழக்கிழமை (15)ம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தங்கலான் படத்தை பார்த்தவுடன் உடனடியாக விக்ரம் மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித் இருவருக்கும் போன் கால் செய்து பேசினேன். படத்தின் முதல் பாதி பார்க்கும்போதே எனக்கு ஆனந்த் கண்ணீர் வந்துவிட்டது. இந்த மாதிரி திரைப்படத்தை நான் தயாரித்து இருக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது” என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

47 minute ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
7 hours ago
16 Jan 2026