2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தனுஷின் ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’

Editorial   / 2018 மே 13 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனுஷின் முதல் ஹொலிவுட் படம், ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் தமிழில் வெளியாகவுள்ளது.

தனுஷ் நடித்துள்ள ஹொலிவுட் படம் ‘Extraordinary Journey of the Fakir’ கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாராகியுள்ளது.

நகைச்சுவ மற்றும் திகில் நிறைந்த இந்தப் படம், 30ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது.

இதை தமிழிலும் வெளியிட விரும்பிய தனுஷ், தயாரிப்பாளர்களிடம் பேசியுள்ளார். அவர்களும் தனுஷின் கோரிக்கையை ஏற்று, தமிழில் வெளியிடுகின்றனர்.

‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் இந்தப் படம் தமிழில் வெளியாகிறது. இதன் முதல் பார்வை, கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டார்  தனுஷ்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X