Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை ராகுல் ப்ரீத்தி சிங், தான் குணம் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சூர்யா நடித்த ’என்ஜிகே’ கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’தேவ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங். இவர் அண்மையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்த நிலையில் ராகுல் ப்ரீத்திசிங், கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி விட்டார். அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது.
இதனை அடுத்து ராகுல் ப்ரீத்திசிங் தனது சமூக வலைத்தளத்தில் ’எனக்கு கொரோனா நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் தற்போது முழுமையாக குணம் அடைந்து விட்டதாக உணர்கிறேன். எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
2021ஆம் ஆண்டு நல்ல பாசிடிவ் எண்ணத்துடனும் நல்ல உடல்நலத்துடனும் தொடங்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
12 minute ago
23 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
27 minute ago