2025 மே 03, சனிக்கிழமை

தரமான சம்பவம் லோடிங்

Freelancer   / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர் உள்ளிட்டோர் நடித்த அயலான் படம் எப்பொழுது தான் ரிலீஸாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். படப்பிடிப்பு எப்பொழுதோ முடிந்துவிட்டது. ஆனால் சிஜி வேலை தாமதமானதால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் தான் அயலான் பற்றி சூப்பர் அப்டேட் வந்திருக்கிறது.

அயலான் படம் 2023ம் ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் இன்று சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அயலானுடன் தான் இருக்கும் போஸ்டர்களை வெளியிட்டு இந்த தீபாவளிக்கு வருகிறோம் என ட்வீட் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, வெறித்தனமான சம்பவம் இருக்கு. கண்டிப்பாக பறப்போம் அண்ணா. இந்த தீபாவளி நம்முடையது அண்ணா. அயலான் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான். அதை யாராலும் தடுக்க முடியாது. போஸ்டரே வேற லெவலில் இருக்கிறது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X