2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தர்ஷன் கைது

Freelancer   / 2025 ஏப்ரல் 04 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இலங்கை நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க் செய்வது தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதில், ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்த நிலையில், இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதனையடுத்து நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் தர்ஷன், நீதிபதியின் மகன், அவரது மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நடிகர் தர்ஷன் தரப்பும் முறைப்பாடு அளித்திருந்தது. 

இதனைத்தொடர்ந்து, இரு தரப்பு முறைப்பாடுகள் குறித்தும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X