2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

தலை முடியை தானம் செய்த பிரபல நடிகை

Editorial   / 2025 ஜூன் 24 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், தனது தலைமுடியில் இருந்து 12 அங்குலத்தை தொண்டு நிறுவனத்திற்கு தானம் செய்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ''ஹேர்கட்'' செய்து கொள்ளும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை கடந்த 2018-ம் ஆண்டும் சோனம் கபூர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு வாயு என்ற ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு எந்த புதிய படத்திலும் சோனம் நடிக்கவில்லை. சமீத்தில் மீண்டும் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

அதன்படி, "எனது கர்ப்பத்திற்குப் பிறகு மீண்டும் கேமரா முன் நிற்க மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். சுவாரஸ்யமான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். எனது அடுத்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன், "என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X