J.A. George / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன் நடித்துள்ள 'கர்ணன்'. திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில்தான் முடிந்தது. இந்த நிலையில் படத்தின் தலைப்புக்கு சிவாஜி நலப்பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள் அறிக்கையில், ''கர்ணன் என்றாலே சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படம் தான் நினைவுக்கு வரும். சட்டப்படி ஒரு திரைப்படத்தின் உரிமையை பெற்று, மற்றொரு திரைப்படத்துக்கு பெயர் வைப்பது நியாயம் என்றாலும் இதை தவிர்ப்பது நல்லது. கர்ணன் என்றாலே கொடுப்பவன்.
ஆனால் உங்கள் திரைப்படத்தில் உரிமைக்காகப் போராடும் ஒருவன் என குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு சமூகத் திரைப்படத்துக்கு 'கர்ணன்' என்று பெயர் வைப்பது ஏற்கத்தக்கதல்ல.
இது சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தும். எனவே திரைப்பட தலைப்பை மாற்றும்படி கோரிக்கை வைக்கிறோம்'' என தெரிவித்துள்ளனர்.
7 minute ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
6 hours ago
8 hours ago