2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’தலைவர் 171’ மாஸ் தகவல்

Mithuna   / 2024 பெப்ரவரி 04 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ’வேட்டையன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பாவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. அதன்படி இந்த படத்தின் கதை இதுவரை ரஜினிகாந்த் நடிக்காத கதைக்களம் என்றும் அதேபோல் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

முதல் கட்ட படப்பிடிப்பு எந்த நாட்டில் என்பதை இன்னும் ஒருசில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தெரிவு ஒரு பக்கம் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X