Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 14 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு நடிகைக்கு திருமணமாகிவிட்டாலே மார்க்கெட் அடிவாங்கும் என்கிற எண்ணம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது தாயாகிவிட்டால் ஹீரோக்களுக்கு அக்கா, அண்ணியாகத் தான் நடிக்க வைப்பார்கள் என நடிகைகள் அஞ்சுவது உண்டு. இந்நிலையில் தான் அதை எல்லாம் மாற்றி புது ரூட் அமைத்திருக்கிறார்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், கண்ணழகி காஜல் அகர்வாலும்.
இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார் நயன்தாரா. முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாலிவுட்டுக்கும் சென்றிருக்கிறார். நயன்தாராவின் கெரியர் நன்றாக செல்வதை பார்த்து பிற நடிகைகளுக்கு புது நம்பிக்கை வந்திருக்கிறது.
நயன்தாரா மட்டும் அல்ல காஜல் அகர்வாலும் தாயான பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் காஜல் அகர்வால். அந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்தார். நீல் வந்த பிறகும் ஹீரோயினாக நடித்து அசத்திக் கொண்டிருக்கிறார் காஜல். மேலும் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பிற தொழில்களில் முதலீடும் செய்து வருகிறார்.
21 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
2 hours ago