2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

திடீர் சிக்கலில் ’கேஜிஎஃப் 2’

J.A. George   / 2022 ஏப்ரல் 26 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றி நடைபோடுகிறது. தங்கச் சுரங்கத்தில் அடிமையாக வேலை செய்யும் மக்களை மீட்டு அந்த மக்களுக்கு நல்ல வாழ்கையை அமைத்து தர முயற்சி செய்யும் ஒரு ஹீரோவின் கதைதான் கேஜிஎப் 2.

இந்த நிலையில் இந்த கதை எனது மகனின் கதை என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மகன் கேஜிஎஃப் தங்க சுரங்கத்தில் வேலை பார்த்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

அதன்போது, அங்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து தங்கத்தை கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவி செய்தத தனது மகன் கடந்த 1996ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது மகனின் கதையை தனது அனுமதியில்லாமல் படக்குழுவினர் படமெடுத்து உள்ளதாகவும் அதுமட்டுமின்றி தனது மகனை கெட்டவனாக சித்தரித்துள்ளார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், இந்த குற்றச்சாட்டு திரைப்படக்குழுவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அந்த பெண் கூறுவதில் உண்மை இல்லை என்று மறுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X