2025 நவம்பர் 15, சனிக்கிழமை

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Freelancer   / 2025 நவம்பர் 04 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மணிரத்னம் வீடுகளுக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில்,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரிஷா வீடு, அண்னாநகர் பகுதியில் உள்ள விஷால், மணிரத்னம் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து காவலர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அங்கு வெடிகுண்டுகள் ஏதும் இல்லாததால் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

திரிஷா வீட்டில் ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 2வது முறையாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X