2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திரிஷாவின் நன்றி

J.A. George   / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் சரவணன், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘ராங்கி’. 

கதை மற்றும் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். ‘ராங்கி’ என்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள். 

படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 

இந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ‘பனித்துளி’ எனும் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. சத்யா இசையில் சின்மயி பாடியிருக்கும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். 

இதனையடுத்து, பாடலை வெளியிட உதவிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டுவிட்டரில் திரிஷா நன்றி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X