Editorial / 2020 மே 29 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டரில் சில கருத்துக்களையும் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களையும் பதிவு செய்து வந்தார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நெட்டிசன்கள் சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீராமிதுன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த மணக்கோலம் உண்மை என்றும், இதையும் கொப்பி செய்ய வேண்டாம் என்றும் அவர் நெட்டிசன்களுக்கு கூறியுள்ளார்.
மேலும் விரைவில் திருமணத்துக்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீராமிதுன் மணமகள் கோலத்தில் இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .