S.Renuka / 2026 மார்ச் 24 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற மாமியாரை நடிகை ராஷ்மிகா மந்தனா அழ வைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நீண்ட நாட்களாக காதலித்து டேட்டிங்கில் இருந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கடந்த மாதம் 26ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்
திருமணத்திற்கு பின்னரும் ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த அந்த 'கேர்ள் பிரண்ட்' என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது தெலுங்கானா திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது மாமியார் மாதவி தேவரகொண்டாவை அழைத்து வந்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

விருதை பெற்றுக் கொண்ட பின்னர் ராஷ்மிகா பேசும்போது, முன்பு எனது நடிப்புக்காக என்னை பலரும் கிண்டல் செய்துள்ளார்கள். ஆனால் இன்றைக்கு மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளேன். திருமணத்திற்கு பிறகு நான் கொண்டாடிய முதல் உகாதி பண்டிகை இது. வீட்டில் பூஜைகளை முடித்துவிட்டு நேராக இங்கே வந்து விருதை பெறுவது எனக்கு மன நிறைவை அளிக்கிறது என்று பேசினார்.

தொடர்ந்து அவரது மாமியாரை பார்த்து, 'நான் மருமகள் ஆகுவதற்கு முன்பே நீங்கள் என்னை உங்கள் மகளாக நேசித்தீர்கள். இன்றைக்கு உங்களது மருமகளாக உங்கள் முன் நிற்பதில் நான் பெருமை அடைகிறேன்.
உங்கள் அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்' என்று பேசினார். இதனைக் கேட்ட அவரது மாமியார் மாதவி, கண்கள் கலங்கி ஆனந்த கண்ணீர் வடித்தார். இது பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
27 minute ago
37 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
52 minute ago