2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

திருமணம் தள்ளிப்போக இதுதான் காரணமாம்!

Freelancer   / 2022 ஜூன் 02 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை பிரியா பவானி சங்கர் தனது திருமணம் தள்ளி போனதற்கான காரணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

'மேயாதமான்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதன்பின் 'கடைக்குட்டி சிங்கம்' 'மான்ஸ்டர்' 'மாபியா' 'ஓமணப்பெண்ணே' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது அவர் அருண்விஜய்யின் 'யானை',  தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' , ஜெயம்ரவியின் 'அகிலன்' , எஸ்ஜே சூர்யாவின் 'பொம்மை', சிம்புவின் 'பத்து தல',  கமல்ஹாசனின் 'இந்தியன் 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக நடிகை பிரியா பவானி சங்கர்,  ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். தனது காதலரின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து,  ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  சமீபத்தில் அளித்த பேட்டியில்,  'நான் கல்லூரி படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததால் திருமணம் தள்ளிப் போய்விட்டது' என்றும் கூறியுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X