2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

திரௌபதியாக தீபிகா

Editorial   / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியத் திரையுலகத்தில், சில வருடங்களாக வரலாற்றுப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தெலுங்கில் தயாரிக்கப்பட்ட ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்கள், ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டபோது பெரும் வசூலைக் குவித்தன.

அதன்பின்னர் தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளில் கூட வரலாற்றுப் படங்களைத் தயாரிக்கும் ஆர்வம் வந்துள்ளன. ஹிந்தியில் ‘மகாபாரதம்’ கதையை சினிமாவாகத் தயாரிக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.

இப்போது அந்தப் படத்தில், திரௌபதி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கப் போகிறாராம். இது பற்றிய அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார். மேலும், படத்தை அவரும் இணைந்து தயாரிக்க உள்ளாராம்.

தீபிகா ஏற்கெனவே ‘பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத்’ ஆகிய வரலாற்றுப் படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

2020 ஜனவரியில் ஆரம்பமாக உள்ள ‘மகாபாரத்’ படம் 2021 தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் ஹிந்தியில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X