A.K.M. Ramzy / 2020 நவம்பர் 10 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
விபிஎப் கட்டண விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தீபாவளிக்கு திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா் சங்கத்தின் தலைவா் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று வைரஸ் காரணமாக இம்மாதம் 30ஆம் திகதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அண்மையில் அனுமதியளித்தது. இதனால், தீபாவளிப் பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால், விபிஎஃப் கட்டணத்தைச் செலுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம், திரைப்படங்களின் 50 சதவீத வசூலை அளிக்க முன்வந்தால், விபிஎஃப் கட்டணம் பெறுவதைக் கைவிடுவதாக அறிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டுவதற்காக இருதரப்பினரும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையே கொரோனா வழிகாட்டு முறைகளைக் கடைப்பிடித்து செவ்வாய்க்கிழமை முதல் பழைய வெற்றிப் படங்களை மீண்டும் வெளியிட்டு திரையரங்குகளைத் திறக்க திரையரங்கு உரிமையாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago