2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தெலுங்கிலும் மிரட்டும் தளபதி

Editorial   / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் நடிப்பில், எதிர்வரும் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் மெர்சல். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில், இப்படம் தெலுங்கில் “அதிருந்தி” என்ற பெயரில் தீபாவளிக்கு வௌியிடப்படவுள்ளது. அதிருந்தியின் டீசர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வௌியாகியிருந்தது.

தமிழில் எந்த அளவிற்கு வரவேற்பு பெற்றதோ, அதே அளவிற்கு தெலுங்கிலும் இந்த டீசர் வரவேற்பு பெற்றுள்ளது, இந்த டீசரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

ஒரு தமிழ் டப்பிங் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைப்பது கபாலிக்கு பிறகு மெர்சலுக்கு தான், விஜய்க்கு அதிருந்தி படத்தின் மூலம் தெலுங்கில் பெரிய வரவேற்பு உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X