Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாதநிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது உடல்நிலை மேம்படுவது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' ( இரத்தம் ரணம் ரெளத்திரம்) திரைப்படத்தில் ராம் சரண் தேஜா நடித்து வருகிறார்.
இவருடன் ஜூனியர் என்டிஆர், இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியா பட், ஸ்ரேயா உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
'பாகுபலி' திரைப்படத்தைப் போலவே இந்தத் திரைப்படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
26 minute ago
33 minute ago