2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

’’தொடை அழகி’’ நடிகை: ஓர் இரவுக்கு ரூ.35 லட்சம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமீப காலமாக தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இந்த ஊழல் புகாரில் தொழிலதிபர் ரத்தீஷ் மற்றும் தொடைக்காக பேமஸ் ஆகியுள்ள நடிகை ஆகியோரின் பெயர்கள் அடிபடத் தொடங்கியிருப்பது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரத்தீஷின் பகட்டான வாழ்க்கை மற்றும் விருந்து கலாச்சாரம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் ஊழலின் மையப்புள்ளியாக கருதப்படும் அவர், தனது ஆடம்பர வாழ்க்கைக்கும், பணத்தை தாராளமாக செலவழிக்கும் பழக்கத்திற்கும் பெயர் போனவர் என்று கூறப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனைக்கு முந்தைய நாள் சென்னையில் நடைபெற்ற ஒரு ஆடம்பர விருந்தில் ரத்தீஷ் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விருந்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள், ரஷ்யாவைச் சேர்ந்த மாடல் அழகிகள், போதைப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பரிசுகள் இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு விருந்தினருக்கும் சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள், ஆடம்பர கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த கைப்பைகள் மற்றும் வாசனை திரவியங்கள் வழங்கப்பட்டதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

இந்த விருந்தில் இளைஞர்கள் மனதில் டிராகன் மாதிரி பிரமாண்டமாக இடத்தை பிடித்துவிட்டு ஒரு தொடை அழகி நடிகையோடு மேலும் சில பிரபலங்கள் கலந்துகொண்டதாகவும், ஒரு இரவு விருந்துக்காக அந்த நடிகைக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .