Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் தாமதமாக வரும் படங்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்காது என்ற சென்டிமென்ட் ஒன்று உண்டு. ஆனால், அந்த நெகட்டிவ் சென்டிமென்ட் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு வேலை செய்யவில்லை என்பதில் படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருக்கிறது.
படம் வெளியான இந்த மூன்று நாட்களில் சுமார் 15 கோடி வரை படம் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். படம் வெளியான முதல் நாளில் எதிர்பார்த்ததை விடவே வசூல் சிறப்பாக இருந்ததாம். ஆனால், கடந்த இரண்டு நாட்களில் மழையால் கொஞ்சம் குறைந்துள்ளது என்கிறார்கள்.
எனை நோக்கி பாயும் தோட்டா படத்துடன் வெளியான படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் போய்ச் சேரவில்லை. கவுதம் மேனன், தனுஷ் இருவரது காம்பினேஷன் என்பதால்தான் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இரு விதமான விமர்சனங்கள் வந்தாலும் இளம் ரசிகர்களைப் படம் கவர்ந்திருப்பதால் படக் குழு இந்த வார முடிவிற்குள் குறிப்பிடத்தக்க வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.
தாமதமாக வந்த படமாக இருந்தாலும் படத்திற்குக் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் படத்தின் தயாரிப்பாளரைக் காப்பாற்றும் என்று திரையுலகில் சொல்கிறார்கள்.
இதனால், தாமதமாகி வெளியாகாமல் இருக்கும் மேலும் சில படங்களுக்கு இந்த வரவேற்பும் வசூலம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .