2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நான்காவது முறையாக இணையும் வெற்றிக்கூட்டணி

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 22 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனுஷ் நடித்த 'கொடி' படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் மீண்டும் தனுஷூக்காக ஒரு கதையை எழுதி வருவதாகவும் விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரியவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

கோலிவுட் திரையுலகில் தற்போது நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் என பிசியான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஷ் தற்போது “பவர்பாண்டி” என்ற திரைப்படத்தை இயக்கி வருவதோடு, கௌதம் மேனனின் “எனை நோக்கி பாயும் தோட்டா” மற்றும் வெற்றிமாறனின் “வடசென்னை” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஏற்கெனவே தனுஷின் தயாரிப்பில் உருவான 'எதிர்நீச்சல்' மற்றும் 'காக்கி சட்டை' ஆகிய திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் கடந்த ஆண்டு தனுஷ் நடித்த 'கொடி' திரைப்படத்தையும் இயக்கினார். இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக தனுஷூடன் அவர் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X