2025 மே 12, திங்கட்கிழமை

நானும் பொறுக்கிதான்: கமல் பதிலடி

George   / 2017 ஜனவரி 23 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களாகவே சல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலக நாயகன் கமல் ஹாசன், தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழர்களை பொறுக்கி என கூறிய பா.ஜ.க தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியம் சுவாமிக்கு, பதிலடி கொடுத்துள்ளார்.

'யாரோ ஒருவர் தமிழர்கள் எல்லாம் பொறுக்கிகள் என பேசியிருக்கிறார். ஆமாம், நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான். எங்கே சென்று பொறுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் கண்டிப்பாக டெல்லி சென்று பொறுக்க மாட்டேன். என்னடா இவன் திடீரென அரசியல் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். நான் பேசுவது அரசியல் அல்ல. தன்மானம்' என்று கூறினார்.

மேலும், “ஒருவேளை, நான் சினிமாவுக்கு வராமல், கலெக்டராகவோ, இன்ஜினியராகவோ இருந்திருந்தால் அலங்காநல்லூர் கிராமத்தில் இந்நேரம் நின்றிருப்பேன்” என்றும் கமல் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X