2025 நவம்பர் 19, புதன்கிழமை

நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை...!

Editorial   / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வந்த தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் 20 இடங்களில் காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதேபோல் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

சி.ஐ.எஸ்.எப். வீரர்களுடன் அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் நேரில் சம்மன் அளித்தனர். 

இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணையும் நடத்தினர். தொடர்ந்து நடிகர் விஜயை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X