2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நடிகை மர்ம மரணம்

J.A. George   / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வித்யா பாலன் நடித்த தி டர்ட்டி பிக்சர், லவ் செக்ஸ் அன்ட் தோக்கா ஆகிய திரைப்படங்களில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஆர்யா பானர்ஜி(33) நடித்திருக்கிறார். 

கொல்கத்தா ஜோத்பூர் பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவரது வீட்டுக்கு வேலைக்கு வந்த பணிப்பெண், வெகுநேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். 

பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஆர்யா படுக்கையறையில் தரையில் சடலமாக கிடந்துள்ளார்.

ஆர்யாவின் மூக்கில் இருந்து இரத்தம் வழிந்தபடி இருந்துள்ளது. மேலும் அவரது முகம் தரையை பார்த்தபடி இருந்துள்ளது. உடலை மீட்ட பொலிஸார் பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X