2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்

Freelancer   / 2022 ஜூன் 29 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்ததார்.

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்றும், நுரையீரல் பிரச்சனையுடன் கொரோனா பாதிப்பும் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 

நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X