2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

நடிகை வரலட்சுமி வந்தடைந்தார்

Editorial   / 2025 ஜூன் 17 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தயாரிக்கப்பட்டு சர்வதேச திரையிடலுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள "கேஜ் பேர்ட்" திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபல தென்னிந்திய நடிகை வரலட்சுமி சரத்குமார், கட்டுநாயக்க விமான நிலையத்லை செவ்வாய்க்கிழமை (17) காலை வந்தடைந்தார்.

இந்தப் படத்தை இலங்கை திரைப்பட இயக்குனர் சந்திரன் ரத்னம் தயாரிக்கிறார்.

இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-122 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு  நடிகை வரலட்சுமி சரத்குமார், செவ்வாய்க்கிழமை (17)  காலை 11.04 மணிக்கு வந்தடைந்தார்.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் துணை இயக்குநர் ஹரேந்திர விஜேவர்தன மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் சர்வதேச திரைப்படத் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சமிந்த முனசிங்க ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் "சில்க் ரூட்" முனையத்தில் அவரை வரவேற்றனர்.

டி.கே.ஜி.கபில


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X