Freelancer / 2023 மார்ச் 21 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.ஜி.எப் பாகம் 1 மற்றும் 2 இல் நடிகர் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார்.
கே.ஜி.எப் படப்பிடிப்பின் போது நடிகர் யாஷ் ஸ்ரீநிதிக்கு தொல்லை கொடுத்ததாகவும் தவறாக நடந்து கொண்டதாகவும் அதனால் இனிவரும் காலங்களில் யாஷ் உடன் எந்தத் திரைப்படங்களிலும் நடிக்கப்போவதில்லை என ஸ்ரீநிதி முடிவு செய்துள்ளதாகவும் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.
இதைத் தொடர்ந்து, யாஷ் படப்பிடிப்பின் போது எனக்கு எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. அவருடன் நடிக்கும் போது எனக்கு அசௌகரியமான உணர்வுகள் ஏற்படவில்லை.
யாஷ் ஒரு நல்ல நண்பன், நல்ல மனிதன், சிறந்த வழிகாட்டி நான் எப்போதும் அவருடைய ரசிகையாக இருப்பேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்ரீநிதி விளக்கம் அளித்துள்ளார்.
13 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
24 minute ago