Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 08 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
23 வயதுடைய பிரபல நடிகை ஒருவரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாடகை முச்சக்கர வண்டியில் பயணித்த நடிகையை, பிலியந்தலை, ஜாலியகொட பகுதியில் வைத்து வன்கொடுமை செய்துவிட்டே, அந்த முச்சக்கரவண்டியின் சாரதி தப்பியோடியுள்ளார்.
இந்த நடிகையின் தனிப்பட்ட தேவைக்காக, மொரட்டுவை கட்டுபெத்த பிரதேசத்தில் இருந்து நுகேகொடை வரை வாடகை சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றின் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.
மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்தில் இருந்து நுகேகொடை நோக்கி முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென முச்சக்கரவண்டியை பிலியந்தலை ஜாலியகொட பகுதியில் வீதிக்கு அருகில் நிறுத்தி, தொழிநுட்ப கோளாறை சரிபார்ப்பதாக கூறிய சாரதி, முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி, பின் இருகையில் இருந்த நடிகையிடம் சென்று அவளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த கட்டாயப்படுத்தியுள்ளார்.
சந்தேக நபரை முச்சக்கரவண்டியில் இருந்து வெளியே தள்ளிவிட்ட நடிகை முச்சக்கரவண்டியில் இருந்து குதித்து அலறியடித்ததாகவும், முச்சக்கரவண்டியின் சாரதி நடிகையை வீதியில் விட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும் அங்கு வந்த அக்கம்பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை நடிகை கூறியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னர் முச்சக்கரவண்டி கொழும்பு- ஹொரணை வீதியூடாக பொரலஸ்கமுவ நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
5 hours ago
30 Apr 2025