2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நடுரோட்டில் முழு நிர்வாணமாக ஆட்டம்: நடிகைக்கு சிக்கல்

Editorial   / 2023 மார்ச் 26 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடலில் ஒரு துணியும் இல்லாமல் முழு நிர்வாணமாக நடு வீதிகளில் நடிகையொருவர் சுற்றித்திரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகை அமண்டா பைன்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தெருக்களில் நிர்வாணமாக சுற்றித் திரிந்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை அமண்டா பைனஸ். இவர் ஈஸி ஏ, ஷீ இஸ் தி மேன், வாட் எ கேர்ள் வாண்ட்ஸ், ஹேர் ஸ்பிரே உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.


அமெரிக்காவில் பிரபல நடிகையாக அறியப்படும் அமண்டா பைனஸ்க்கு தற்போது 36 வயது ஆகிறது. இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் தெருவில் சுற்றி திரிந்தபடி காணப்பட்டு உள்ளார்.

அவர் வழியில் சென்ற காரை நிறுத்தி அதன் ஓட்டுனரிடம் பேசியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தெருவில் வந்த கார் ஒன்றை நிறுத்தி, தனக்கு மனநல பிரச்சனை மீண்டும் ஏற்படுவது போன்று இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவரே 911 எண்ணுக்கு போன் செய்து உதவி கேட்டிருக்கிறார்.

இதன்பின் அவரை மீட்டு அருகே இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் உதவியுடன் மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என நிபுணர் ஒருவர் முடிவு செய்து உள்ளார்.


இதன்படி, அவர் பல நாட்கள் வரை மனநல சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அமாண்டா. அங்கு அவர் மனநல மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறது.


இன்னும் சில நாட்களுக்கு அமாண்டா மருத்துவமனையில் தான் இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X