2025 மே 09, வெள்ளிக்கிழமை

நம்பர் 1ஆக அமலா போல்

Editorial   / 2019 ஜூன் 21 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் முதன்மை நாயகியாக நடிக்கும் 'ஆடை' படத்தின் டீசர் நேற்று([ஜூன் 19) மாலை வெளியிடப்பட்டது. வெளியான நிமிடத்திலிருந்தே அந்த டீசர் ஏற்படுத்தி அதிர்வலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யு-டியுபில் 12 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தையும் பிடித்துவிட்டது.

அதற்குக் காரணம் படத்தின் நாயகி அமலாபால். டீசரின் ஆரம்பத்தில் தன் மகளைக் காணவில்லை என அவருடைய அம்மா வந்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அப்போது கடைசியாகப் பேசிய போது என் மகள் குடித்திருந்தாள் என்கிறார். அதன்பிறகு ஏதோ ஒரு உயர்ந்த கட்டிடத்தில் போலீஸ் தன் விசாரணையைத் தொடங்குகிறது.

ஒரு குறிப்பிட்ட தளத்திற்குச் செல்கிறார்கள். அங்கு உடலில் சிறு ஆடை கூட இல்லாமல் படுத்திருந்த அமலா பால் அதிர்ச்சியுடன் எழுந்து உட்காருகிறார். அந்தக் காட்சியை எந்த ஆபாசமும் இல்லாமல் காமிரா படம் பிடித்திருக்கிறது. டீசரைப் பார்த்து ரசிகர்கள் நிறையவே அதிர்ச்சியடைந்துள்ளார்கள் என்பது தெளிவகாத் தெரிகிறது.

இல்லை என்றால் 12 மணி நேரத்தில் இப்படி ஒரு பார்வை யு டியுபில் டீசருக்குக் கிடைத்திருக்காது. டீசரில் உள்ள காமிரா கோணங்களும் இது வழக்கமான படமல்ல வித்தியாசமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அடுத்த சில நாட்களுக்கு இந்த டீசர்தான் 'டாக்' ஆக இருக்கப் போகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X