George / 2017 மே 09 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

“பாகுபலி” திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்கா, தமன்னா என இரண்டு முன்னணி ஹீரோயின்கள் நடித்திருந்தாலும் முதல் பாகத்தில் தமன்னாவுக்கும் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுக்கும் சமமான அளவு முக்கியத்துவத்தை ஒதுக்கியிருந்தார் இயக்குநர் ராஜமௌலி.
ஆனாலும், முதல் பாக தமன்னாவை விட, இரண்டாம் பாகத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்கா இரசிகர்களின் மனதில் நின்றுவிட்டார். அந்த கதாபாத்திரத்துக்கு தனது மேம்பட்ட நடிப்பால் அனுஷ்காவை விட வேறு யாரும் சரியாக பொருந்தியிருக்க முடியாது என்றே என்றே இரசிகர்கள் கருதுகிறார்கள்.
“பாகுபலி” திரைப்பட ஸ்கிரிப்ட் தயாரானதும் தேவசேனா வேடத்தில் நடிக்க இயக்குநர் ராஜமௌலி, முதலில் நினைத்தது நயன்தாராவைத்தானாம்.
ஆனால், அந்த சமயத்தில் நயன்தாரா கைநிறைய திரைப்படங்களுடன் பிஸியாக இருந்ததால் அவரால் ராஜமௌலி கேட்ட திகதியை ஒதுக்க முடியாமல் போயிற்றாம்.
நயன்தாராவின் இழப்பு அனுஷ்காவின் இலாபமாக மாறிவிட்டது. இதேபோலத்தான் சிவகாமி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்க இருந்து அதேபோல திகதி பிரச்சினையால் ரம்யா கிருஷ்ணனுக்கு அந்த வாய்ப்பு மாறியதும் நமக்கு தெரிந்ததே.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago