2025 ஜூலை 02, புதன்கிழமை

நயனின் புதிய திரைப்படம் 'டோரா'

George   / 2016 ஜூலை 05 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது விக்ரமுடன் இருமுகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சிவகார்த்திகேயன் உடன் ஒரு திரைப்படம் உள்ளிட்ட கைவசம் மூன்று நான்கு திரைப்படங்கள் வைத்திருக்கிறார்.

இந்நிலையில், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரமான டோரா என்பதை நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். 

இயக்குநர் சற்குணம் தயாரிக்க அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கவுள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா தான் முதன்மை ரோலில் நடிக்கிறார். 

அவருடன் ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். விவேக் மெர்வின் இசையமைக்க இருக்கிறார். இத்திரைப்படத்துக்கு பெயர் வைக்கப்படாமல் இருந்த நிலையில் டோரா என்று பெயர் வைத்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவரும் விதத்தில் கதை உருவாக இருக்கிறதாம். குறிப்பாக குழந்தைகளை அதிகம் கவரும் விதமாகவே டோரா என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .