Editorial / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு மாபெரும் காம்போ திரும்பி வர இருக்கிறது. நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் நயன்தாரா இணையும் புதிய Periodic படம் உருவாகவுள்ளது. இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் இந்த படம் உருவாக இருக்கிறது, இதற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் நயன்தாரா ஒரு ராணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது கதாபாத்திரம், மரியாதை, பொறுப்பு, அரசியல் சக்தி ஆகியவற்றைக் கலந்த வலுவான கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இது நயன்தாராவுக்கு ஒரு புதிய அவதாரம் ஆகும், ஏனெனில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பின், தமிழில் புதிய வாய்ப்புகள் குறைவாக இருந்த நிலையில், தெலுங்கில் ஒரு மாபெரும் படத்தின் மூலம் மீண்டும் திரை உலகில் ஆற்றலுடன் வருகிறார்.
இந்த படம் நயன்தாரா மற்றும் பாலகிருஷ்ணா இணையும் 4வது கூட்டணி ஆகும். இதற்கு முன்னர் இருவரும் Simha, Sri Rama Rajyam, மற்றும் Jai Simha ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்த மூன்று படங்களுமே வணிக ரீதியாக சிறந்த வெற்றி பெற்றிருந்தன. அதனால், இந்த புதிய பீரியடிக் படம் மீண்டும் ஒரு பெரும் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
14 minute ago
18 minute ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
6 hours ago
6 hours ago