2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நயன்தாரா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்: அமைச்சர் விளக்கம்

Editorial   / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி  இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். விக்னேஷ் சிவன் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

“நயனும் நானும் பெற்றோராகியுள்ளோம். இரட்டை ஆண் குழந்தைகளை நாங்கள் வரவேற்றுள்ளோம். எங்களது வழிபாடு, எங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் அனைத்தும் இணைந்து எங்களுக்கு குழந்தைகளாக உருவெடுத்துள்ளன,” என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

இதோடு தம்பதி இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி மாமல்லபரத்தில் திருமணம் செய்துகொண்டனர்.  இந்த நிலையில் திருமணமான நான்கு மாதத்தில் வாடகை தாய் ஊடாக இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ்சிவன் - நடிகை நயன்தாரா தம்பதியிடம் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

பி

ரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் திகதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. நேற்று அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

தமிழ்நாடு எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம். அவரிடம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும், திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X