2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நயன்தாரா, விக்னேஷ் சிவன் விவாகரத்து?

Editorial   / 2024 ஜனவரி 19 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இந்த வாடகைத்தாய் விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் அதை சட்டரீதியாக சரி செய்தனர்.

கணவர் விக்னேஷ் சிவன், குழந்தைகள் உயிர், உலகம் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நயன்தாராவின் வாழ்க்கையில் ஜோதிடர் ஒருவர் குண்டை தூக்கி போட்டுள்ளார்.

தெலுங்கில் மிகவும் பிரபலமான ஜோதிடர்களில் ஒருவர் வேணு சாமி. இவர் சமீபத்தில் கூறுகையில், நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவார்கள். இது நடக்கும் என கூறியுள்ளார். அப்படி நடக்கவில்லை என்றால் ஜோதிட துறையில் இருந்து தான் விலகிவிடுகிறேன் என்றும் அடித்து கூறியுள்ளார் வேணு சாமி. 

 

ஜோதிடத்தை பலரும் நம்பினாலும், சிலர் அதில் நம்பிக்கை இல்லாமல் தான இருக்கிறார்கள். ஆனால், இவர் கூறியது ஏன் இப்படி பரவலாக பேசப்பட்டு வருகிறது தெரியுமா.

சமந்தா - நாகசைதன்யா இருவரும் திருமணம் செய்தபோது, இவர்கள் இருவரும் ஒன்றாக வாழமாட்டார்கள், விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவார்கள் என இந்த ஜோதிடர் வேணு சாமி தான் கூறியுள்ளார். அதே போல் தற்போது நயன்தாராவிற்கு இவர் கூறியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X