2025 மே 05, திங்கட்கிழமை

நான்கு மொழிகளில் அனுஷ்கா

J.A. George   / 2021 நவம்பர் 09 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘நிசப்தம்’ திரைப்படம் தோல்வியடைந்தது.

இதனால் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே நடிகை அனுஷ்கா, திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் செய்தி வெளியானது.

இந்த நிலையில், அனுஷ்கா நடிக்க உள்ள 48ஆவது திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராக உள்ள இந்த திரைப்படத்தை பி.மகேஷ்பாபு எழுதி இயக்குகிறார்.

யூவி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதுடன், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. திரைப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X