2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நெற்றிக்கண்ணை திறந்த நயன்தாரா

J.A. George   / 2020 நவம்பர் 18 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை நயன்தாரா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நெற்றிக்கண். மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்கிவருகிறார். 

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். திலீப் சுப்ராயன் ஸ்டண்ட் இயக்கம் செய்கிறார். 

லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. நயன்தாரா இந்த படத்தில் பார்வையற்றவராக நடித்துள்ளார் என்ற தகவலும் வெளியானது.

இந்த நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளான இன்று நெற்றிக்கண் படத்தின் டீஸரை வெளியிட்டது படக்குழு. நயன்தாரா கதை சொல்வதுடன் டீஸர் ஆரம்பிக்கின்றது.

ஒரு ஊர்ல பாவப்பட்ட ஆட்டுக்குட்டிங்க நிறைய இருந்துச்சாம். அதை தெரிஞ்சுக்கிட்ட கெட்ட நரி அதோட வேலையை காமிச்சுக்கிட்டே இருந்துச்சாம். அப்போ ஒரு தைரியமான ஆடு அந்த நரி விழுவதற்காக ஒரு குழியை தோண்டி வச்சுச்சாம். அந்த நரியும் அந்த குழில நல்லபடியா வந்து விழுந்துச்சாம் என்று டீஸரில் கதை சொல்கிறார் நயன்தாரா. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X