2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பூனம் பாண்டேயின் 'ஹோலி' வீடியோ

George   / 2017 மார்ச் 13 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

“2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்றால் எனது ஆடைகளை அவிழ்ப்பேன்” என, அறிவித்து அதிர்ச்சி கொடுத்த, அப்போது மொடலாக இருந்த பூனம் பாண்டே பற்றி இணைய உலகில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.  

அதனைத் தொடர்ந்து, பல அரைகுரை ஆபாச வீடியோக்களை வெளியிட்டு ஹிந்தித் திரையுலகிலும் நடிகையாக அறிமுகமானார்.

இந்நிலையில், 'ஹோலி' பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சில தினங்களுக்கு முன்பாகவே, “என்னுடன் ஹோலி கொண்டாடத் தயாரா” என ஒரு ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, பிகினி உடையில் 55 விநாடிகள் ஓடக் கூடிய ஒரு வீடியோவை தனது யூ-டியூபில்  வெளியிட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பூனம் பாண்டே.

அந்த வீடியோவில், அவர் மேல் தூவப்பட்டிருந்த வண்ணப் பொடிகள் ஒவ்வொரு நிறமாக விலகிச் செல்ல, கடைசியில் வெள்ளை நிற டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்து நிற்கும் வீடியோ இப்போது பொலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் சென்சார் கிடையாதா?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X