George / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை பிரணீதா பயணித்த கார், நேற்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளாகியதையடுத்து திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
சகுனி, மாஸ் ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா இரசிகர்களுக்கு அறிமுகமானவர் ப்ரணிதா, ஞாயிற்றுக்கிழமை காலை தன் தாயாருடன் ஹைதராபாத் திரும்பிய போது அவர் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்தை சந்தித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் அவர் தப்பினார், பின் அம்பியுலன்ஸ் அந்த இடத்துக்கு விரைந்து வந்தது. சிகிச்சையை தொடர்ந்து அவர் மீண்டும் வேறு ஒரு காரில் ஹைதராபாத் சென்றார்.
இதை ப்ரணிதா தன் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த பல திரை நட்சத்திரங்கள் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago