2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்

George   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான  திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி, உடல்நலக்குறைவால் சென்னையில், வியாழக்கிழமை காலமானார்.

திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமாகி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களிலேயே நடித்துள்ளார். குறிப்பாக தமிழில்தான் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், 74 வயதான நடிகர் வினு சக்கரவர்த்தி கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி  காலமானார்.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வௌ்ளிக்கிழமை இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X