Gavitha / 2016 ஜூலை 04 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

தங்கமகன் படத்துக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. தனுசுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, தம்பிராமைய்யா, பூஜா ஜாவேரி, கருணாகரன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தின், படப்பிடிப்பு முழுக்க முழுக்க ரயிலுக்குள்ளேயே நடந்துள்ளது. இதில் தனுஷ் ரயில்வே கேன்டீன் டீபாயாக நடித்துள்ளார். ஜூலை இறுதியில் இப்படம் வெளியாகவுள்ளது என்று தெரியவருகின்றது.
இதையடுத்து, தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னொரு படம் கொடி. சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கிச்சட்டை போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியிருக்கின்றார். முதன்முறையாக தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தில், அவருக்கு ஜோடியாக த்ரிஷா, அனுபமா நடித்துள்ளனர். இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் ரெடியாகிவிட்ட போதும், ஜூலை 28ஆம் திகதி தனது பிறந்த நாள் என்பதால், அன்றைய தினம் இரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொடி ‡பஸ்ட்லுக்கை வெளியிடுகிறாராம் தனுஷ்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago