2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பஞ்சத்தைப் போக்கவரும் சாயீஷா

Editorial   / 2018 ஜூன் 08 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோலிவூட்டில், திறமையான இளம் நடிகைகளுக்கு, கடும் பஞ்சம் நிலவுகிறது. கோடிகளில் சம்பளம் கேட்கும் நடிகைகள் எல்லோரும், 30 வயதைக் கடந்துவிட்ட நிலையில், நடிப்பு, நடனம், கவர்ச்சி ஆகியவற்றில் திறமையான நடிகைகளைத் தேடி, இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் படையெடுக்கின்றனர்.

இந்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்த முடிவுசெய்துள்ள “வனமகன்” திரைப்பட நாயகி சாயீஷா, முழுவீச்சில் கோலிவூட் களத்தில் குதித்துள்ளார்.

கடைக்குட்டிச் சிங்கம், கஜினிகாந்த், ஜுங்கா ஆகிய திரைப்படங்களில் நடித்துவரும் அவர், மேலும் சில திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடனத்தில், அபார திறமை பெற்றவர் என்பதால், அதைப் பயன்படுத்தி, முன் வரிசைக்கு வர முயற்சித்து வருகிறார். இதனால், தெலுங்கு, ஹிந்தித் திரைப்படங்களில் வாய்ப்பு தேடுவதை, தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்துள்ளரெனத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X