2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய ஜனனி

Freelancer   / 2025 பெப்ரவரி 15 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜனனி குணசீலனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்தவர் நடிகை ஜனனி குணசீலன். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். இதே போன்று குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார்.

தற்போது நிழல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஒன்றில் சிக்கியிருக்கிறார். 

அதில், அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காலில் கட்டு போட்டுள்ளார்.

இலங்கை - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி, மாடல், விஜே மற்றும் செய்தி வாசிப்பாளராக இருந்து தனது திறமையாலும் அழகாலும் தற்போது தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X