2025 மே 06, செவ்வாய்க்கிழமை

படப்பிடிப்பில்இணைந்தார் சமந்தா !

J.A. George   / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.  

இந்த ஆண்டு காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானதுடன் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பித்துள்ளது.

அனிருத் இசையமைக்கவிருக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த நிலையில் படக்குழுவுடன் இணைந்துள்ள நடிகை சமந்தா  இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

ஹைதராபாத்தில் நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, இந்த படத்தில் நடிக்க முடியாது என்று நடிகை சமந்தா கூறியதாக செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X