2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாஞ்சாலிக்கு 5; எனக்கு 15’

Editorial   / 2019 ஜூலை 08 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மேயாதமான்' ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் ஆடை. பர்ஸ்ட் லுக், டீசர் என அனைத்துமே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆடை படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிடப்பட்டது. அமலா பால், பார்த்திபன், அருண்பாண்டியன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய அமலா பால், ஆடை திரைப்படம் தனது சினிமா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

"இசை வெளியீட்டு விழா வரைக்கும் இந்த படம் வந்திருப்பது சந்தோஷமான விஷயம். எனக்கு வரும் கதைகள் முழுவதும் பொய்யாக இருந்தது. அதனால் சினிமாவைவிட்டு விலக முடிவு செய்திருந்தேன்.

அந்த நேரத்தில் தான் ஆடை கதை வந்தது. உடனே இயக்குனரை சந்தித்து கதை கேட்டேன். பிறகு இது ஏதும் இங்கிலிஷ் பட ரீமேக் இல்லையே எனக் கேட்டேன். இல்லை இது ஒரிஜினல் தான் என ரத்னகுமார் கூறினார்.

இந்த படம் ஆரம்பித்ததில் இருந்தே பாசிட்டிவ்வாக இருந்தது. இந்த படத்தில் நம்பிக்கை தான் முக்கியம். படக்குழ மீது முழு நம்பிக்கை வைத்தேன். அதன் பிறகு தான் படப்பிடிப்புக்கு சென்றோம்.

மேயாதமான் படத்திற்கு முன்பு ரத்னகுமார் எழுதிய கதை ஆடை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அவர் மேயாதமான் எடுத்தார். இந்த படம் எனக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். இந்த படத்துக்காக எந்த ஒப்பந்தமும் போடவில்லை.

இன்று டிரெய்லர் வந்ததுக்கு அப்புறம் நிறைய பேர் ஏமாந்திருப்பாங்க. ஏனென்றால் படத்தில் ஆடையே இருக்காது என நினைத்திருப்பார்கள். டிரெய்லரை பார்த்த பிறகு இத்தனை காஷ்டியூமா என ஏமாந்து போயிருப்பார்கள்.

பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் தான். எனக்கு 15 கணவர்கள் இருந்தார்கள். அந்த அளவுக்கு எனக்கு பாதுகாப்புக்கு 15 ஆண்கள் இருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X