2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பார்வதி திரைப்படத்துக்கு தணிக்கையில் தடை

J.A. George   / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் பார்வதி. இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக மரியான், கமல்ஹாசனின் உத்தமவில்லன், ஸ்ரீகாந்துடன் பூ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சித்தார்த் சிவா இயக்கத்தில் வர்த்தமானம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ரோஷன் மாத்யூ, சித்திக் ஆகியோரும் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த பிரச்சினையை மையமாக வைத்து திரைப்படம் தயாராகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவான காட்சிகள் திரைப்படத்தில் உள்ளன என்றும், எனவே திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தினர்.

இந்த திரைப்படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் திரைப்படத்தில் தேசவிரோத கருத்துகள் உள்ளதாக தெரிவித்து திரையிட அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து படத்தை மும்பையில் உள்ள மேல்முறையீட்டு குழுவுக்கு அனுப்ப திரைப்படக்குழு முடிவு செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X